எதிரிக்கு எதிரான உங்கள் கேடகம்

எதிரிக்கு எதிரான உங்கள் கேடகம்

பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள் “ (எபேசியர் 6:16). கிறித்துவத்தில் நமது விசுவாசம் மிக முக்கிய வாழ்க்கை முறை. Read more
மீட்பும்  கிறிஸ்தவமும்

மீட்பும் கிறிஸ்தவமும்

“மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டது போல நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு அவருடைய மரணத்திற்கு உள்ளாக்கும் ஞானஸ்தானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம் (ரோமர் 6:4) கிறிஸ்தவர்கள் உண்மையில் மீட்கப்பட்டவர்கள்Read more
உங்கள் சத்துருவை (எதிரியை) அன்புகூருங்கள்

உங்கள் சத்துருவை (எதிரியை) அன்புகூருங்கள்

 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.  (மத்தேயு 5:44) சில கிறிஸ்தவர்கள் “எதிரியை இல்லாமல் ஒழிக்கும் ஆராதனை” என்ற தலைப்பில் Read more
நித்திய ஜீவன் : நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டீர்கள்

நித்திய ஜீவன் : நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டீர்கள்

நித்திய ஜீவன் : நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டீர்கள் தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.   குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.   ( 1 யோவான் 5:11-12) Read more
சந்தோஷமாக இருங்கள்; சமாதானப்பிரபு உங்களுக்குள் இருக்கிறார்

சந்தோஷமாக இருங்கள்; சமாதானப்பிரபு உங்களுக்குள் இருக்கிறார்

சந்தோஷமாக இருங்கள்; சமாதானப்பிரபு உங்களுக்குள் இருக்கிறார் நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா 9:6)  மேலே சொன்ன வசனம் எவ்வளவு மேன்மையானது. Read more
கிறிஸ்துவே கன்மலை

கிறிஸ்துவே கன்மலை

“….மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை “ (மத்தேயு 16:18). கர்த்தராகிய இயேசு, ஜீவனுள்ள தேவனுடையRead more
அனுதினமும் சந்தோஷம்

அனுதினமும் சந்தோஷம்

அனுதினமும் சந்தோஷம் “இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும் படி பெற்றுக் கொள்வீர்கள் (யோவான் 16:24 ) நமது ஆரம்ப வேத வசனம் பிதாவின் இருதயத்தையும்Read more
இரட்சிப்பு

இரட்சிப்பு

இயேசு கிறிஸ்து சொன்னார் "யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஒருபோதும் Read more
சமாதானம் நிறைந்த வாழ்வு

சமாதானம் நிறைந்த வாழ்வு

“மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”. (ரோமர் 8;6). மேலே குறிப்பிட்ட வசனத்தை நீங்கள் பார்க்கும்பொழுது உங்களுக்கு சந்தோஷமும், Read more
எக்காலத்துக்கும் செலுத்திய ஒரே ஒரு தியாக பலி

எக்காலத்துக்கும் செலுத்திய ஒரே ஒரு தியாக பலி

வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபிரெயர் 9:12). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் முதலாவது பலி செலுத்தியதை வேதம் இவ்வாறு கூறுகிறது. எபிரேயர் 9:9 “ அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.” பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் வித்தியாசமான, வேறுவிதமான காணிக்கைகளையும், பலிகளையும்…
தேவ வார்த்தையும் பரிசுத்த ஆவியானவரும்

தேவ வார்த்தையும் பரிசுத்த ஆவியானவரும்

தேவ வார்த்தையும் பரிசுத்த ஆவியானவரும் “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று”. ( ஆதியாகமம் 1:2-3) தாவீதின் சங்கீதங்களை படிக்கும்பொழுது தாவீது வார்த்தைகளின் பெறுமதியை குறித்து நன்கு அறிந்திருந்தார் என்பதை காணக்கூடியதாக இருக்கும். அதனை தனது மகனான சாலொமோனுக்கும் கற்று கொடுத்தார். ஆகையினால்தான் சாலொமோன் ராஜா நீதிமொழிகள் 18:21 இல் “​​மரணமும்…
Savior of the world

Savior of the world

அன்பான சகோதர, சகோதரிகளே! வேதத்தில் மல்கியா 4:2ல் உள்ள வேத வார்த்தையை கவனியுங்கள். உங்கள் மீது நீதியின் சூரியன் உதிக்கும். இந்த வேத வார்த்தையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிதாவாகிய தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். இது எங்களுக்கானது இல்லை. இந்த வாக்குத்தத்தமானது தேவ வார்த்தையாக இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பில் பூரணப்படுத்தப்பட்டு விட்டது. எப்படியென்றால்; ' நீதியின் சூரியன் ' இயேசுக்கிறிஸ்துவே தான் இந்த நீதியின் சூரியன் ஆமென். முழு…
Stand Strong In Faith

Stand Strong In Faith

விசுவாசத்தில் உறுதியாய் தரித்து நில்லுங்கள் - Pastor Mahen எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாய் இருக்கிறது. (2 கொரிந்தியர் 10:4). கிறிஸ்தவன் என்பவன் ஒரு சாதாரண மனுஷனை போலல்லாமல் அவனது பார்வையும், அணுகு முறையும் முற்றிலும் வேறுபட்டது. அவன் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் தன்னுடைய காரியங்களை நடப்பிக்கின்றான். மிக முக்கியமாக, அவனுடைய விசுவாசத்தை பலவீனப்படுத்த்தும் நோக்கத்தில் தோன்றும் சவால்களை அவன் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு ஆவிக்குரிய அணுகுமுறையை கடைப்பிடிக்கவேண்டும்.…
Christian’s authority over diseases and diseases!

Christian’s authority over diseases and diseases!

வியாதிகள் நோய்கள் மீதான கிறிஸ்தவனின் அதிகாரம் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:17) மேலே குறிப்பிட்ட ஆதார வசனமானது எமது தெய்வீக தன்மையை Read more
Jesus Christ—The Saviour

Jesus Christ—The Saviour

இயேசு கிறிஸ்து மாத்திரமே உலக இரட்சகர் இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா 2:11) இயேசு கிறிஸ்துவே இந்த உலகத்துக்கு இரட்சகரும் மீட்பருமாக இருக்கிறார். இந்த நற்செய்தியின் மீதே எமது விசுவாசம் தங்கியிருக்கின்றது. ஆகையினால்தான் மேலே குறிப்பிட்ட ஆதார வசனம் மிகவும் முக்கியமாக இருக்கின்றது. மத்தேயு 1:21இல் வேதம் சொல்கிறது “ அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;…
Impact Your World With His Divine Presence

Impact Your World With His Divine Presence

[4:04 AM, 8/3/2022] Mahen: தெய்வீக பிரசன்னத்தை நமது உலகில் வெளிப்படுத்தல் ! ————-///————///—— “அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (ஏசாயா 53:10). இயேசுவின் எல்லா அற்புத அடையாளங்களையும் புத்தகங்களாக பதிவு செய்து வெளியிட்டால் முழு உலகமும் கொள்ளாது என்று பைபிளில் எழுதியிருக்கிறது. அது மெய்யாகவே உண்மையாக இருக்கிறது. அவருடைய முழு வாழ்வும் முடிவில்லாத…
PERFECTED IN HIM

PERFECTED IN HIM

கிறிஸ்து எங்களுக்குள் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிறார் ! —————-///———-///—— “மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10)”. எப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டீர்களோ அப்பொழுதே தேவனுடைய முழுமையையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்குள் தேவனுடைய நிறைவைத்தவிர வெறொன்றும் இல்லை. இது ஒரு மேன்மையான நிலை. ஆனபடியால்தான் நீங்கள் ஒருபொழுதும் தோற்றுபோவதோ அல்லது எதிரியினால் மேற்கொள்ளப்படவோ முடியாதவர்கள். இது ஒரு ஆச்சரியப்படத்தக்கது அல்ல. நீங்கள் சாதாரண மனிதர்கள்…
Your spirit  is one with God now

Your spirit is one with God now

ஆவியாக இருக்கின்ற தேவனோடு நீங்களும் மறுபடியும் பிறந்து அவரோடு ஒரே ஆவியாக இப்பொழுதே இருக்கிறீர்கள் ! ———///——-///——— “நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். (எபேசியர் 5:30)”. யோவான் 15:5 இல் , இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார்; “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். … “ இந்த வசனம் நாம் தேவனோடு ஒருமித்து ஒன்றாக இரண்டறக் கலந்து விட்டோம் என்பதை தெரிவிக்கின்றது.…
OUR NEW IDENTITY IN CHRIST

OUR NEW IDENTITY IN CHRIST

கிறிஸ்துவில் எங்கள் அடையாளம் ! ————-///———-///—— கர்த்தராகிய தேவனின் வார்த்தையிலிருந்து நாம் மிக முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டிய வெளிப்பாடுகளில் ஒன்று, கிறிஸ்துவில் நாம் யார் இரடசிக்கப்பட்ட நாங்க எப்படிப்பட்ட மனிதர்களாக மாற்றப்பட்டிருக்கிறம் என்ற அறிவு சரியா இருக்கவேண்டும். கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்ற அடையாளத்தை கண்டுபிடிப்பதின்மூலம் நாம் எம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளமுடியும். அந்த சரியான வேத அறிவின் மூலம்தான் எமது துன்ப வாழ்க்கையில் இருந்து ஒரு மேன்யான…
God is Love (1 John 4:16)

God is Love (1 John 4:16)

தேவன் அன்பாகவே இருக்கிறார். பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை மனுஷருடைய பாவங்களுக்காக மரிப்பதற்குக் கொடுத்தார், அப்படி செய்ததின் மூலம் அவர் மனிதகுலத்தின் மீது கொண்ட அன்பினை வெளிப்படுத்தி அவரே உலகத்தின் இரட்சகராக இருக்கிறார். பைபிள் சொல்கிறது " ....தேவன் அன்பாகவே இருக்கிறார்.Read more
The Word Of His Grace

The Word Of His Grace

தேவனுடைய கிருபை நிறைந்த வார்த்தை ! ——————///———-///—- “இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். (அப்போஸ்த லர் 20:32) தேவனுடைய வார்த்தையானது வரலாறுகளின், கதைகளின் தொகுப்பு மாத்திரம் அல்ல, தேவனுடைய வார்த்தையானது தேவன் உங்களோடு இப்பொழுதே பேசிக்கொண்டிருக்கிறார். அவர் என்ன சொல்லுகிறாரோ அது எங்களுடைய தற்போதைய வாழ்விற்கு பொருத்தமானதும், இந்த வார்த்தையை கொண்டு எங்கள்…
RIGHTEOUSNESS GIVES YOU DOMINION

RIGHTEOUSNESS GIVES YOU DOMINION

தேவ நீதிக்குள் இருந்து கொண்டு ஆளுகை செய்வது ! —————///———///——- “அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள்; இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.” (ரோமர் 5:17). மறுபடியும் பிறந்த ஒவ்வொரு தேவனுடைய மகனும் (மகளும்) இப்பொழுதே இந்த வாழ்க்கையில் ராஜாவாக இருக்கின்றான். அவன் தேவ நீதிக்குள் வாழ்ந்துகொண்டு ஆளுகை செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறான்.…
THE KINGDOM IN YOU

THE KINGDOM IN YOU

பரலோக ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கின்றது ! —————-///———-///— “யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து” (மாற்கு 1:14) இயேசு கிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்க்கிப்பதற்காகவே வந்தார். மேலும் அவர் சொன்னார் “காலம் நிறைவேறிவிட்டது பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது” என்றார் (மாற்கு 1:15). தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது ஒரு இடத்தை குறிப்பது அல்ல. தேவனுடைய ஆளுகையை குறிக்கிறது.…
Jesus Christ has fully accomplished His purpose and plan

Jesus Christ has fully accomplished His purpose and plan

இயேசு கிறிஸ்து தமது நோக்கத்தையும் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றி விட்டார் ! —————///———///——— “உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.” (கொலோசெயர் 1:26,27)”. இயேசு கிறிஸ்து தன்னுடைய நோக்கத்தையும், திட்டத்தையும் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டார் என்று வேதத்தில்…
Thou wilt keep him in perfect peace, whose mind is stayed on thee: because he trusteth in thee.

Thou wilt keep him in perfect peace, whose mind is stayed on thee: because he trusteth in thee.

உணர்வுபூர்வமாக தேவ வார்த்தையிலே தரித்திருங்கள் ! ————-///———///——— “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். “ (ஏசாயா 26: 3). உங்கள் வாழ்க்கையில் கிருபையின்மேல் கிருபை பெறவும், விசுவாசத்திலே வல்லவர்களாக வளரவும், தேவ வல்லமையினால் மேம்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும் வேண்டுமா? நீங்கள் கட்டாயம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டும். நீங்கள் உங்களை சுற்றிலும் சரியான, தெளிவான சத்தியத்தினால் உங்களை நிறைத்துக் கொள்ளுங்கள்.…
The death of Jesus Christ made his will alive and working

The death of Jesus Christ made his will alive and working

கிறிஸ்து நமக்காக எழுதிய உயில், உயிரடைந்து தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது ! ————///——-///——- “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் (1 கொரிந்தியர் 11:26)”. நாம் ஒவ்வொரு தடவையும் திருவிருந்தில் பங்கு கொள்ளும் பொழுது புதிய உடன்படிக்கையின் உயிலை எழுதியவரின் மரணத்தை நினைவு கூறுகிறோம். கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே புதிய உடன்படிக்கையில் உருவான அந்த உயில், உயிர் அடைந்து…

அவருடைய அழிக்கப்படமுடியாத ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது !

“கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். (2 கொரிந்தியர் 4:10)”. கிறிஸ்துவின் நற்செய்திக்கூடாக ஜீவனையும், அழியாமையையும் எங்களுக்குத் தந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்கு எங்களை வரவழைத்து அந்த ஜீவன் எங்கள் சரீரத்திலே வெளிப்படவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். (2 திமெத்தெயு 1:10)”. இதனை கவனித்து சிந்தித்துப்பாருங்கள்; அவருடை கண்ணுக்குத்தெரியாத ஜீவன் உங்கள் சரீரத்திற்கூடாக வெளீப்படுவதை சிந்தித்துப்பாருங்கள். இந்த அறிவே…

நீங்கள் நித்திய ஜீவ உலகத்தில் இப்பொழுதே வாசம்பண்ணுகிறீர்கள் !

“என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)”. மரணத்தின் சாபம் இந்த உலகிலே எல்லாவற்றின் மீதும் ஆளுகை செய்கிறது, அதனால்தான் உலகத்தில் உள்ள அத்தனை பொருட்களும் மங்கி அழிந்து போகிறது. ஆனால் நீங்களோ மறுபடியும் பிறக்கும்பொழுது (Born again) மரண உலகத்தில் இருந்து விடுபட்டு நித்திய ஜீவன் என்ற உலகத்திற்கு…
Faith confession 17

Faith confession 17

வேதம் நீதிமொழிகள் 4:18 இல் , “..... நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.என்னுடைய வாழ்க்கையிலே நேற்றைய நாளைய விட இன்றைய நாள் மிகவும் நன்மையான நாள் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கட்டளையிடுகிறேன்.என்னுடைய விசுவாசம் என்னுடைய வாழ்க்கையிலே எனக்கு வேண்டியவற்றை எல்லாம் உருவாக்கிக் கொள்வதினாலே, வர வர முன்னோக்கிய பாதையில் முன்னேறிக்கொண்டு நடை போடுகின்றேன்.நான் அறிந்து கொண்ட வாழ்வு, மேல் நோக்கியதும் முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கையுமாக இருக்கின்றது.என்னுடைய…

கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு எப்பொழுதும் வெற்றி, வெற்றி மாத்திரமே !

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (II கொரிந்தியர் 2:14)”. உலகளாவிய ரீதியில் பார்க்கும்பொழுது தேவனுடைய திருச்சபைகளே அனேக எதிர்ப்புக்களுக்கும் தாக்குதல்களுக்கும் உண்டாயிருக்கிறது. அதற்கான காரணமானது பிசாசானவன் தனக்கு வரப்போகும் நிரந்தரமான தண்டனைக்குப்பயந்து ஜனங்களின் இருதயத்திலே பயத்தை விதைத்து வருகிறான். ஆனாலும் அவன் முற்றுமுழுதாக தோற்றுப்போனவன். மேன்மையான காரியங்கள் இயேசு கிறிஸ்துவின் திருச்சபையிலே இப்பொழுது நடைபெற்று வருகிறது.…

எந்த சூழ்நிலையும் அன்பையே வெளிப்படுத்துங்கள் !

“தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, (1 தெசலோனிக்கேயர் 1:2)”. உங்கள் அன்பை மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தும்பொழுது அவர்களிடத்தில் இருந்து எதாவது பிரதியுபகாரம் பெற்றுக்கொள்ளலாம் என்பதைப்பற்றியது அல்ல. இது தேவன் மீது நீங்கள் வைத்த அன்பும், அந்த அன்பினால் ஏவப்பட்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே. சாத்தியமில்லாத வேளையில்கூட நீங்கள்…

சுகவாழ்வுக்கான விசுவாச அறிக்கை

நான் தேவ வார்த்தையிலும், தேவ வார்த்தை என்னிலும் நிலைத்திருக்கின்றது. ஆகையினால் என்னுடைய எண்ணங்கள், நோக்கங்கள், என்னுடைய திட்டங்கள், என் இருதயத்தின் விருப்பங்கள் எல்லாம் தேவனுடைய விருப்புக்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றது. நான் நல்ல சுகமாகவும், தெளிவாகவும் இருக்கின்றேன். நான் தெய்வீக சுகத்திலே வாழ்கின்றேன். வியாதிகளும், நோய்களும், மரணமும் எனக்கு அப்பாற்பட்டு மிகவும் தூரத்தில் இருக்கின்றன. தேவனுடைய வார்த்தையானது என்னுடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு எலும்புகளிலும், ஒவ்வொரு துளி ரத்தத்திலும், என்னுடைய ஒவ்வொரு…

பரிபூரணப்படுதல் சாத்தியமே!

“ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:48)”. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சரியான வார்த்தையை கற்றுக்கொள்ளாததனால் தவறான எண்ணங்களையும், போதனைகளையும் நம்பி அவற்றை பல வருட காலமாக பின்பற்றுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தவறான போதனைகள் கேட்பதற்கு நன்றாகவும் மதரீதியான சாயல் உள்ளதாய் இருந்தாலும் அவைகள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாகவே இருக்கிறது. பெரும்பாலானோர் இவ்வாறாக பேசிக்கொள்வார்கள், உதாரணமாக “நாங்கள் இந்த மாம்ச சரீரத்தில் வாழும் வரையில்…

உங்களுடைய எண்ணங்களையோ கருத்துக்களையோ பேசாமல் தேவனுடைய வார்த்தையையே பேசுங்கள்!

“தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். (அப்போஸ்தலர் 26-27)”. 1 சாமுவேல் 8 இல் இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களை ஆளுகை செய்யும்படிக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்தும்படிக்கு சாமுவேலை வேண்டிக்கொள்கிறார்கள். இதனைக்குறித்து சாமுவேல் விசனமடைந்து அதனை தேவனிடம் தெரிவிக்கின்றான். இதனை 1 சாமுவேல் 8:22 இல் “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள்…

தெய்வீக பிரசன்னத்தை நமது உலகில் வெளிப்படுத்தல

 குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். (ஏசாயா 53:10)”. இயேசுவின் எல்லா அற்புத அடையாளங்களையும் புத்தகங்களாக பதிவு செய்து வெளியிட்டால் முழு உலகமும் கொள்ளாது என்று பைபிளில் எழுதியிருக்கிறது. அது மெய்யாகவே உண்மையாக இருக்கிறது. அவருடைய முழு வாழ்வும் முடிவில்லாத அற்புதங்களாலும் அதிசங்களாலும் அடையாளங்களினாலும் நிரம்பியதாக இருக்கிறது. அவர் இந்த உலகத்திற்கு நம்பிக்கையையும், சந்தோசத்தையும், ஜீவனையும் கொடுத்திருக்கிறார். வேதம் அப்போஸ்தலர்…

தேவனுடைய பிரசன்னத்திற்குள் சுதந்திரவாளியாக பிறந்துள்ளீர்கள் !

“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான் 8:36)”. மேலே இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட வசனமானது கிறிஸ்தவர்களுக்காக கூறப்பட்ட வசனம் அல்ல என்று பலபேர் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவனானவன் முன்பு விடுதலையாக்கப்பட்டவனோ, அல்லது இனிமேல்தான் விடுதலையாகப்போகிறவனோ அல்ல. கிறிஸ்தவனுக்கு எங்கே இருந்து விடுதலை அல்லது எவரில் இருந்து விடுதலை? கிறிஸ்தவன் என்பவன் புதிய சிருஷ்டியாக இருக்கிறான். அவன் உயிருதெழுந்த இயேசு கிறிஸ்துவிடம் இருந்து உருவாகி இருக்கிறான். அதனால் அவனுக்குள் உயிர்த்தெழுதலின்…

POVERTY IS NOT A BLESSING

For ye know the grace of our Lord Jesus Christ, that, though he was rich, yet for your sakes he became poor, that ye through his poverty might be rich (2 Corinthians 8:9). The Bible says, “The blessing of the LORD, it maketh rich, and he addeth no sorrow with it” (Proverbs…

சுக வாழ்விற்கான விசுவாச அறிக்கை 1

 வேதம் சொல்லுகிறது எபிரேயர் 4:12 இல் “ தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”தேவனுடைய வார்த்தையானது எனக்குள்ளேயும் என்னுடைய சரீரத்தின் எல்லா பகுதியிலும் என்னுடைய எலும்புகளுக்குள்ளும் வல்லமையாக வேலை செய்கிறது என்று அறிக்கை பண்ணுகிறேன். தேவனுடைய வார்த்தையை நான் எனக்குள்ளே பெற்றுக்கொள்ளும்பொழுது அது என்னுடைய ஆவி, ஆத்துமா,…

கிறிஸ்து எங்களுக்குள் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிறார். (கொலோசெயர் 2:10)

(கொலோசெயர் 2:10) கிறிஸ்து எங்களுக்குள் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிறார். மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.                        (கொலோசெயர் 2:10) எப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டீர்களோ அப்பொழுதே தேவனுடைய முழுமையையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்குள் தேவனுடைய நிறைவைத்தவிர வெறொன்றும் இல்லை. இது ஒரு மேன்மையான நிலை. ஆனபடியால்தான் நீங்கள் ஒருபொழுதும் தோற்றுபோவதோ அல்லது எதிரியினால்…

நாங்கள் கிறிஸ்துவின் வெற்றியில் வாழ்கிறோம் (I கொரிந்தியர் 15:57.)

 I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (I கொரிந்தியர் 15:57.) கிறிஸ்தவத்தில் நாம் உறுதியாக முன்னேறுகிறோம். நாங்கள் பின்வாங்குவதில்லை.. நாங்கள் பிரச்சனைகளை அல்லது கஷ்டங்களின் மத்தியிலும் தைரியமாகவும் துணிவாகவும் இருக்கின்றோம். நாங்கள் விசுவாசம் நிறைந்த  அறிக்கைகளை தொடர்ந்து பேசுகிறோம். நாம் வாழ்க்கை பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம். என்ன வந்தாலும் நாம் ஜெயம்கொண்டவர்களாக அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.  சிலர் இப்படி சொல்வார்கள் வாழ்க்கை…

தீமையை நன்மையால் வெல்லுங்கள் (ரோமர் 12:21)

ரோமர் 12:21. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.  நன்மையானது தீமையை விட பலமும் மேலானதும், மிகவும் வல்லமை வாய்ந்ததுமாகும். தீமையானது நன்மைக்கு மேலாக ஒரு போதும் நீடித்த அதிகாரம் செலுத்த முடியாது. இந்த உலகம் கொடுமை நிறைந்ததும் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு பகை நிறைந்தது என்று சிலர் சொல்வார்கள்.  ஆனால்  அன்பு பகையை, வெறுப்பை  விட மேன்மையும், பலமும், வாய்ந்தது. இது ஒளியையும் இருளையும் போன்றது. …

உங்களுக்கு போதுமான நேரம் உண்டு!

நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். ( யோவேல் 2:25) நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக தேவ வார்த்தையை படிப்பதற்கு, பரிசுத்த ஆவியானவரோடு இனைந்து வார்த்தைக்கு முற்றிலும் உங்களையே கொடுக்கும்போது தரமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடைபெற தொடங்குகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கை  முறையில் உடனடியாக பிரதிபலிக்க வேண்டும், விசேஷமாக உங்கள்…

கிறிஸ்தவம் – ஒரு ஐக்கியம் ( அந்நியோன்னியம்)

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். 1 கொரிந்தியர் 1:9. உண்மையான அல்லது சரியான கிறிஸ்தவம் என்பது ஜீவனுள்ள தேவன் மனிதனுக்குள்ளே வாசம்பண்ணி செயல்படுவது. இது கிறிஸ்துவின் உயிரோட்டமான வாழ்வு ஒரு மனிதனுக்குள் இருப்பதும், தெய்வீகத்தின் செயல்பாடுகள் மனிதனுக்குள் இருந்து வெளிப்படுவதும் ஆகும்.   இந்த வெளிப்பாடு பல கிறிஸ்தவர்க்ள் மத்தியில்  அறிந்துகொள்ளப்படவில்லை. உண்மை என்னவெனில் ஜீவனுள்ள தேவனோடு உயிரோட்டமான உறவை வைத்திருப்பதே. இந்த…

தேவாலயம் வழி (மார்க்கம்) என்று அழைக்கப்படுகிறது

சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.  (அப்போஸ்தலர் 9:1-2 ) அப்போஸ்தலர் காலத்தில் ஜெப ஆலயம் ஏற்கனவே வழி (மார்க்கம்) என்று அழைக்கப் பட்டதை மேலுள்ள கோடிட்ட வசனத்திலிருந்து பார்க்கிறோம்.  இயேசு யோவான் 14:6 “நானே வழியும் சத்தியமும்…

அவர் உங்களில் நம்பிக்கையாக (விசுவாசம்) இருக்கிறார்.

கலாத்தியர் 2:20 “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” வேதாகமம் சொல்கிறது, இயேசு கிறிஸ்து சிலுவையிலே அவமானத்தையும்   உத்தரிப்பையும் அனுபவிக்கும்பொழுது, அவர் உயிர்த்தெழும் பொழுது விசுவாசிகளான நாங்கள்  அடையப் போகும் சந்தோசத்தையும் மகிமையையும் எண்ணியிருந்தார். (எபிரேயர் 12:2)  அவர் கண்ட சந்தோஷமும் மகிமையும்…

ஆண்டவரின் அன்பு – அதன் ஏவுகின்ற வல்லமை

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;.  (2 கொரிந்தியர் 5:14 ) எல்லா காரியத்தின் நிறைவிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீதுள்ள அன்பு மாத்திரமே நிலைத்திருக்கும் என்று நீங்கள் அறிவீர்களா?  உங்கள் முழு  வாழ்வும் உலக மனிதர்களுடைய  அங்கீகாரத்திலும், புகழிலும், எதையும் வாங்ககூடிய பணம் படைத்தவர்களானாலும்; உங்கள் வாழ்வில் இயேசுவின் சுவிசேஷதின் வல்லமை உங்களை வழிநடத்தவில்லை என்றால், நீங்கள் ஒரு…

அவர் (தேவன்) உங்களுடன் “ஆவி மொழியில்” பேசுகிறார்

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. யோவான் 10:27   பெரும்பாலன வேளைகளில் ஆண்டவர் பேசுகிறார் என்று சொல்லும் பொழுது, அவர் என்ன மொழியில் பேசுகிறார் என்று சிலர் ஆச்சரியப்படுகின்றனர். அவர்களும்கூட ஆண்டவரின் சத்தத்தை எப்படி கேட்பது என்று அறிந்து கொள்ள விரும்புவார்கள். தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் உங்களுடைய ஆவியுடன் பேசுகிறார். அவர் உங்கள் இருதயத்தில் (ஆவியில்) எப்படி பேசுகிறார் என்பதையும்,…

சரியானதும் பொருத்தமானதுமானதுமான வார்த்தை (ஒலி) குறியீடுகளை உரைத்தல்.

 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.   (எசேக்கியல் 37:7 ) தீர்க்கதரிசனம் என்றால் தெய்வீக வெளிப்பாடுகள் மற்றும் ஆற்றல் வாய்ந்த வார்த்தைகளை பேசுவதும் ஜீவனுள்ளதும் ஜீவனைக்கொடுக்கும் வார்த்தைகளை பேசுவதுமாகும்.  தீர்க்கதரிசனம் என்பது வெறுமனே வார்த்தைகளை உரைப்பது மாத்திரம் அல்ல, அத்துடன் சரியான, சமயத்திற்கேற்ற ஆவியின் வார்த்தைகளை உரைப்பதாகும். “நான் எனக்கு…

எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள்.

ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 17. அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை. 18. துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், 19. அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.  (நீதிமொழி 6:16-19 ) சிலருக்கு பொய் சொல்லும் பழக்கத்திற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பதால் உங்களுக்கு பழைய…

இயேசு எல்லாவற்றிற்கும் கிரயம் செலுத்திவிட்டார்.

கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.   (ஏசாயா 53 :10 ) தேவனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அவமானத்தையும் வேதனையையும் அனுபவித்தது அவருடைய பாவங்களுக்காக அல்ல, அவர்  எங்களுக்காகவே எங்கள் பாவப்பட்ட இடத்தை எடுத்து நாங்கள் படவேண்டிய வேதனையை, பாடுகளை அனுபவித்தார்.    எங்களுடைய பாவங்களை…