இயேசு கிறிஸ்து மாத்திரமே உலக இரட்சகர்

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
(லூக்கா 2:11)
இயேசு கிறிஸ்துவே இந்த உலகத்துக்கு இரட்சகரும் மீட்பருமாக இருக்கிறார். இந்த நற்செய்தியின் மீதே எமது விசுவாசம் தங்கியிருக்கின்றது. ஆகையினால்தான் மேலே குறிப்பிட்ட ஆதார வசனம் மிகவும் முக்கியமாக இருக்கின்றது. மத்தேயு 1:21இல் வேதம் சொல்கிறது “ அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்”
இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே மனிதனை மீட்டெடுத்து அவனுக்கு தேவ ரகமான நித்திய ஜீவனை கொடுத்து அதனை எல்லா மனிதர்களும் பெற்றுக்கொள்ளும்படிக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார். அவர் தன்னைத்தானே பலியாக செலுத்தி அவரது தியாகத்தின் மூலம் முழு உலகத்தையும் மீட்டெடுத்தார். மனிதனுடைய எல்லா பாவங்களுக்குமான முழுமையாக செலுத்தி, பாவப்பட்ட மனிதனுடைய பாவத்தினால் விளைந்த ஆக்கினைத்தீர்ப்பு என்ற சபிக்கப்பட்ட நிலையை தானே ஏற்றுக்கொண்டார்.
வேதம் சொல்லுகிறது 2 கொரிந்தியர் 5:19இல் “அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்”.
மேலும் 2 கொரிந்தியர் 8:9 சொல்லுகிறது “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.
அவர் சிலுவையிலே எங்கள் நிமித்தமே அந்த கொடூரமான மரணத்தை ஏற்றுக்கொண்டார். 2 கொரிந்தியர் 5:21இல் “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”
அவர் சிலுவையிலே அறையப்படும்பொழுது தேவனாக இருந்தவர் எம்மைப்போலவே பாவப்பட்ட மனிதர்களாக மாறினார். எசேக்கியேல் 18:20இல் தேவன் சொல்லியிருந்தார் “ பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்”(ஆவிக்குரிய மரணம்)
ரோமர் 5:12 சொல்லுகிறது “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று”
ஆவிக்குரிய மரணம் என்பது தேவனை விட்டு பிரிந்து வாழுகின்ற வாழ்க்கை. இயேசு கிறிஸ்து எங்களுக்காக, எங்களுடைய இடத்தை சிலுவையில் தான் ஏற்றுக்கொண்டு சிலுவையிலே தொங்கியபொழுது அவர் பரம பிதாவை விட்டு பிரிந்த வேதனையை அனுபாவித்தார்.
ஆனாலும் தேவனுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம். ஏனென்றால் இயேசு கிறிஸ்து (தேவ ஆட்டுக்குட்டி) பாவத்தை போக்கும் பலியாக தன்னை அர்ப்பணித்த பொழுது உலகத்தின் பாவங்களை நீக்கி மனிதனுடைய இரட்சிப்பை பரிபூரணப்படுத்தினார் (யோவான் 1:29).
1யோவான் 4:14 சொல்லுகிறது “ பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்” அல்லேலூயா!

ஜெபம்
இயேசு கிறிஸ்து இல்லாத வாழ்வு தேவன் அற்ற வாழ்வு. அது தண்டனைக்குரியது. ஆகையினால் தேவ மனுஷர்களாகிய நாம் தேவ நற்செய்தியை உலகம் முழுக்க அறிவிப்பதனால் பரலோகத்தில் இருந்து நீதியானது மழையைப்போல பொழிகின்றது. பார்க்கும் இடமெல்லாம் இரட்சிப்பு துளிர்விட்டு வளர்கின்றது.
மனிதர்களுடைய இருதயங்கள் எல்லாம் இந்த கிறிஸ்துவின் மகிமையின் நற்செய்தியை கேட்டு இருதயத்திலே சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறார்கள். அப்பொழுது பாவிகள் நீதிமான்களாகவும், மகிமை உள்ள வாழ்வுக்கும், சத்தியத்துக்குள்ளும் கொண்டுவந்து சேர்க்கப்படுகிறார்கள்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே!
ஆமென்!
மேலதிக வாசிப்பு: அப்போஸ்தலர் 4:12; யோவான் 1 :29; யோவான் 14:6
Pastor Mahen