ஆவியாக இருக்கின்ற தேவனோடு நீங்களும் மறுபடியும் பிறந்து அவரோடு ஒரே ஆவியாக இப்பொழுதே இருக்கிறீர்கள் !
———///——-///———
“நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
(எபேசியர் 5:30)”.

யோவான் 15:5 இல் , இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார்; “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். … “
இந்த வசனம் நாம் தேவனோடு ஒருமித்து ஒன்றாக இரண்டறக் கலந்து விட்டோம் என்பதை தெரிவிக்கின்றது.
இதுவே எமது ஆதாரம் வசனத்தின் செய்தியாகவும் இருக்கின்றது.
வசனத்தின் படி நாங்கள் கிறிஸ்துவின் கைகளாக, கால்களாக; மொத்தத்தில் அவருடைய வசனத்தின் படி நாங்கள், கிறிஸ்துவின் அவயவன்களாக ஆக இருக்கிறோம்.

மேலும், 1 கொரிந்தியர் 6:15 இல், கிறிஸ்துவுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை மிகவும் ஆழமாக தெரிவிக்கின்றது. “உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா?.
இது கிறிஸ்துவின் சபையை குறிக்கின்றது. இதனுடைய அர்த்தம் உங்களின் கால்கள் கிறிஸ்துவின் கால்களாக இருக்கின்றது.
உங்கள் கரங்கள் கிறிஸ்துவின் கரங்களாக இருக்கின்றது.
உங்கள் சரீரம் கிறிஸ்துவின் சரீரத்தின் நீட்சியாக இந்த உலகத்திலே இருக்கின்றது.
இதனை நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது உங்களுக்கு வேறு விதமான, எண்ணமும், சிந்தனையும், பார்வையும் உங்களைக் குறித்து உண்டாகின்றது.

கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு ஒன்றாக இருக்கிறேன் என்று நீங்கள் அறியும் பொழுது, நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வியாதிப்படவோ, நோய்வாய்ப்படவோ முடியாது.
அவரோடு ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் பொழுது உங்கள் சரீரத்தில் உள்ள அவயவங்கள் (organs) ஒருபொழுதும் பழுதடைய முடியாது.
உங்களுக்குள் பாயும் அவருடைய நித்திய ஜீவன், உங்களை எப்பொழுதும் பரிபூரணப்படுத்திக்கொண்டே இருக்கும்.

இந்தச் செய்தியே,
1 கொரிந்தியர் 12:27 இல், “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்”.
இந்த வசனத்தின்படி நீங்கள் நிச்சயமாகவே அவருடைய சரீரத்தின் அங்கமாகவும், அவரில் இருந்து இயங்கும் உறுப்பாகவும் இருக்கின்றீர்கள்.
நியமிக்கப்பட்ட செய்கைகளை செய்கிறவர்களாகவும் இருக்கின்றீர்கள். அல்லேலூயா !

நீங்கள் அவருடைய சரீரத்தில் விசேஷித்த ஒரு அங்கமாகவும், அடையாளம் காணப்படக் கூடியவர்களாகவும் இருக்கிறீர்கள்.
இது ஒரு மிகவும் விசேஷித்த நிலை !!

இதனை பவுல் அடிகளார் மேலும் விளக்குகின்றார்; எபேசியர் 5:28, “ அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். இதில், பவுல் அடிகளார், (இருவர்) கணவன் மனைவியாக திருமணம் முடித்து இருக்கும்பொழுது, அவர்களுடைய சரீரங்கள் இருவருக்கும் சொந்தமாக இருக்கின்றது.
நீங்கள் கிறிஸ்துவின் சரீரமாக இருப்பதினால், உங்கள் சரீரம் கிறிஸ்துவுக்கு சொந்தமாக இருக்கின்றது.

எங்களுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவை பவுல் அடிகளார் மேலும் விவரிக்கையில்; கணவன் மனைவிக்கு உள்ள உறவைக் காட்டிலும் மேலான உறவிற்கு எங்களை எடுத்துச் செல்கிறார்.
1 கொரிந்தியர் 6:17 இல், “அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்”.

இதனுடைய அர்த்தம் என்னவென்றால் கிறிஸ்துவுக்கு உங்கள் சரீரத்தின் மீது உரிமை உண்டு; அது போலவே உங்களுக்கும் கிறிஸ்துவின் சரீரத்தின் மீது உரிமை உண்டு. பரலோகத்தில் இருக்கும் இயேசுகிறிஸ்துவின் மகிமையுள்ள உயிர்த்தெழுந்த சரீரமானது, உங்கள் சரீரத்துக்கு ஊடாக இந்த பூமியிலே வெளிப்படுகின்றது. அல்லேலூயா !

இப்பொழுது நீங்கள், கொலோசையர் 1:27 சொல்வதை நன்கு புரிந்து கொள்ள முடியும். “…..கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்”.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் கிறிஸ்து இயேசுவுடன் இணைக்கப்பட்டு ஒருமித்து இருக்கின்றேன் என்கின்ற சிந்தை உடையவர்களாக இருங்கள்.

அறிக்கை
——————
நான் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் அவையமாவும், அவருடைய எலும்புக்கும் சதைக்கும் அவயவன்களுக்கும் உரியவனாக இருக்கின்றேன்.
நான் கிறிஸ்துவுடன் ஒருமித்து இருக்கின்றேன் என்ற சிந்தை உடையவனாக வாழ்கின்றேன்.
எனது ஆவிக்கூடாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த சரீரத்தின் மகிமை எனது சரீரத்துக்கு ஊடாக வெளிப்படுகின்றது. வியாதியோ, வருத்தமோ, நோய்களோ, எந்த வைரஸ்களோ என்னுடைய சரீரத்தில் தங்கியிருந்து அழிவைக் கொண்டு வர முடியாது. ஏனென்றால் நான் தேவனோடு இணைந்து ஒரே ஆவியாக இருக்கின்றேன்.
தெய்வீகம் எனக்குள் இருந்து கிரியை செய்கின்றது.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக !

மேலதிக வாசிப்பு; யோவான் 14:16-17;
யோவான் 14:20;
யோவான் 17:20-21

Thanks 🙏
Pas. Mahen

2 thought on “Your spirit is one with God now”
  1. This is the perfect website for everyone who hopes to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want toÖHaHa). You certainly put a new spin on a subject thats been discussed for decades. Great stuff, just great!

Comments are closed.