கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;.  (2 கொரிந்தியர் 5:14 )

ல்லா காரியத்தின் நிறைவிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீதுள்ள அன்பு மாத்திரமே நிலைத்திருக்கும் என்று நீங்கள் அறிவீர்களா?  உங்கள் முழு  வாழ்வும் உலக மனிதர்களுடைய  அங்கீகாரத்திலும், புகழிலும், எதையும் வாங்ககூடிய பணம் படைத்தவர்களானாலும்; உங்கள் வாழ்வில் இயேசுவின் சுவிசேஷதின் வல்லமை உங்களை வழிநடத்தவில்லை என்றால், நீங்கள் ஒரு வெறுமையான  வாழ்க்கையையே வாழ்கிறீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  (மாற்கு 8:36) “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்பு, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” என்று மத்தேயு 6:33  இல் கூறினார். கிறிஸ்துவும் அவரது சுவிசேஷசத்திட்கும் கிரிஸ்தவர்கள் வாழாவிட்டால், அவர்கள் வேறு எக்காரணத்திற்காக வாழவேண்டும்?

கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் எல்லாமுமாய் இருக்கிறார். பரலோகத்தினதும்  பூமியினதும் மகிழ்ச்சியும், களிப்புமாக அவரே இருக்கிறார்.       

கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவும் அவரது நித்திய வார்த்தையும் தவிர வேறு எந்த விடயங்களாலும் வழிநடத்தப்படுவதில்லை. 

இதனுடைய அர்த்தம், அவருடைய வார்த்தை உங்களிடம் வந்து ஒரு மாறுதலையும், உங்கள் இருதயத்தில் உணர்த்துதலையும் அதனோடு உங்களை இயக்கவும் செய்யும். அவைகளே தேவனுக்கு பிரியமான காரியமாக அமையும். இதனையே இயேசு யோவான்14:15 இலே “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்ற வார்த்தையிலே வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் அன்பினாலே ஏவப்பட்டு நீங்கள் செய்யும் காரியங்கள் மாத்திரமே இந்த பூமியில் பொருட்டானது. மேலே சொன்ன வசனத்தில், பவுல் அடிகளார்; சுவிசேஷசத்தை பிரசிங்கிப்பதற்கு  அவருக்குள் இருந்து வல்லமையாக கிரியை செய்யும், கிறிஸ்துவின் அன்பை (தேவஅன்பை). விபரிக்கின்றார்.  அந்த அன்பினால் கட்டுப்பட்டு, ஏவப்பட்டு  நட்செய்தியை பிரசிங்கித்தார். அவர் செய்ததெல்லாம் நட்செய்தியை உலகம் முழுவதும் அறிவித்ததே. இதே சிந்தனை உடையவர்களாக, உங்களுடைய நோக்கமும், இலக்கும் இயேசு கிறிஸ்த்துவின் மீதே இருப்பதாக. நீங்கள்   செய்யும் எல்லா கிரியைகளிலும் அவரது அன்பு உங்களை வழிநடத்துவதாக .      

ஜெபம்

அன்புள்ள இயேசுவே, நான் உம்மை முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும், முழுமனதோடும் நேசிக்கிறேன். என் வாழ்க்கையில் அத்தியாவசிய வல்லமையாக மாறியுள்ள நற்செய்தியின் பாதுகாவலராக என்னை ஆசீர்வாதத்திற்காக நன்றி. நான் எப்பொழுதும்  நற்செய்திகாக கொழுந்து விட்டு எரியவும், வர வர மிகவும் பிரகாசிக்கின்ற வெளிச்சமாகவும் என் உலகில் ஒளி வீசுகின்றேன். அல்லேலூயா