தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். 1 கொரிந்தியர் 1:9.
உண்மையான அல்லது சரியான கிறிஸ்தவம் என்பது ஜீவனுள்ள தேவன் மனிதனுக்குள்ளே வாசம்பண்ணி செயல்படுவது. இது கிறிஸ்துவின் உயிரோட்டமான வாழ்வு ஒரு மனிதனுக்குள் இருப்பதும், தெய்வீகத்தின் செயல்பாடுகள் மனிதனுக்குள் இருந்து வெளிப்படுவதும் ஆகும். இந்த வெளிப்பாடு பல கிறிஸ்தவர்க்ள் மத்தியில் அறிந்துகொள்ளப்படவில்லை. உண்மை என்னவெனில் ஜீவனுள்ள தேவனோடு உயிரோட்டமான உறவை வைத்திருப்பதே. இந்த உறவு இயேசு கிறிஸ்துவினாலே சாத்தியமாயிற்று. என்னவென்றால் தேவனோடு ஐக்கியமான ஒரு வாழ்வு.
கிறிஸ்தவத்தின் முழுமையெல்லாம் இந்த ஐக்கியத்திற்குள் அடங்க்குகிறது. கிற்ஸ்தவத்தின் மகிமையென்பது தேவனோடு உள்ள அன்னியோன்ய உறவு முறை. அவரோடு ஐக்கிய உறவைப்போணும்பொழுது உங்களுக்கு எல்லாமே மாற்றம் பெறுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சர்வத்தையும் படைத்த தேவனோடு எங்களை ஒன்றாக்கியும், ஐக்கியத்தையும், பங்குதாரராகவும், இணைப்பையும், மற்றும் தோழமையையும் ஏற்படுத்தினார். அவர் மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், புதிதான உயிர்ரோடு அவரை தேவன் எழுப்பினார். வேதாகமம் சொல்கிறது; “ தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்க்கும் படிக்கு இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டார்” (எபிரேயர் 2:9) அவர் செய்தது எல்லாம் எங்களை தேவத்துவத்துடனும் மேன்மையான பரலோக ஜனங்களுடன் இணைத்ததுவே. நாம் இப்போழுதே தேவனுடைய சுபாவத்தில் பங்குள்ளவர்களாக இருக்கின்றோம்.
வேதம் சொல்கிறது; “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” எபேசியர்2:7
அவர் எங்களை தன்னோடு இணைத்துக்கொண்டார். இப்பொழுது இந்த இடத்தில், அவருக்குள், அவருக்கூடாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஆளுகை செய்கிறீர்கள். கிறிஸ்தவம் என்றாலே இதுதான், தேவன் மனிதனுக்கூடாக செயல்படுவது. தேவத்துவத்துடன் ஒன்றாக, இரண்டற கலந்திருப்பதற்கே நாம் அழைக்கப்பட்டோம். உங்களுக்குள் தேவனுடைய ஜீவன் இருக்கிறது. அத்துடன் நீங்கள் நித்தியமான ஐக்கியத்தை அவரோடு பெற்றுள்ளீர்கள்.
இதுவே மெய்யான (நிஜமான) அனுபவமாகும். அவர் உங்களுக்குள் தன்னுடைய இடத்தை ஏற்படுத்தி, உங்களுக்குள் வாசம்பண்ணி உங்களுக்கூடாக வாழ்கிறார். இந்த மெய்யான (சத்திய) உறவுமுறையை அறிந்து சாதாரண சமய (மத) வழிபாடுகளுக்கு அப்பால் வாழுங்கள். அல்லேலூயா.
ஜெபம். அன்பின் தகப்பனே, கிறிஸ்துவோடு உள்ள ஒரு அற்புதமான வாழ்வுக்காகவும் உம்மோடு உள்ள நித்திய ஐக்கியத்தின் மகிழ்ச்சிக்காகவும் உமக்கு நன்றி. உலகத்தோற்றத்திற்கு முன்பே எனக்காக முன்குறிக்கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும், உம்மோடு ஐக்கியமாக இருப்பதற்கும் முற்குறித்ததிற்காக நன்றி. எம்முடைய வாழ்க்கை முன்னேற்றமாகவும், வெற்றியோடும், சமாதானத்தோடும் மற்றும் செழிப்போடும், மத வழிபாட்டிற்கு மேலாக வாழ்வை வாழ்வதற்கும் அழைத்ததற்காக இயேசுவின் நாமத்தினாலே நன்றி. ஆமென்.